வேல்முருகன் கவலைக்கிடம்... ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

First Published May 29, 2018, 1:50 PM IST
Highlights
Velmurugan serious treatment at Stanley hospital


சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு  கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி  நடந்த போராட்டத்தில்,  போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிசையில் இருப்பவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கமல், தினகரன், வைகோ மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

இதுகுறித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் விழுப்புரம் போலீஸார் கைது செய்து, அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புழல் சிறையில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த இருந்துள்ளார். வேல்முருகன் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறைக்குச் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தார். வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் வாங்கினார்.

இதனையடுத்து, கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், வேல்முருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் இதைத்தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேல்முருகனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!