திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேல்முருகன்..!

Published : Mar 08, 2021, 02:57 PM IST
திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேல்முருகன்..!

சுருக்கம்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் தங்களது ஆதரவை திமுகவிற்கு அளித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அக்கட்சியின் தலைவர் உட்பட நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகத்துக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்;-  திமுக எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். எந்தப் பகுதியை எங்களுக்கு கொடுத்தாலும் எங்களுடைய ஒரே கொள்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சொல்கிறார்களோ அதே தொகுதியில் போட்டியிட நாங்கள் தயார்.

இன்று மாலை 5 மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்கள். அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு கையெழுத்தாகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?