வேகமெடுக்கும் கொரோனா. அடுத்த 2 மாத காலம் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.. சென்னை மாநகர ஆணையர் அறிவுரை..

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 2:17 PM IST
Highlights

இதற்காக சோதனைச்சாவடிகள் அமைக்கப்படாது என கூறிய அவர், கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் இருக்கும் நிலையில் 10 தெருக்களில் தான் கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.  

சென்னை மாவட்டத்தில்  தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35 ஆயிரம் தேர்தல் அலுவலர்களுக்கு 1வாரகாலத்தில் கொரொனோ தடுப்பூசி போடும் பணி முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகரட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் தினந்தோறும் 20 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார். 

சட்டமன்ற தேர்தல் பணியில் 35 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும், அவர்களுக்கு 1 வார காலத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனாவில் இருந்து மீண்டு வர தடுப்பூசி தான் அறிவியல் பூர்வமாக கை குடுக்கும் என்றும் சென்னையில்  இறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்றார். சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்திருப்பதாகவும், அதனால் அடுத்த 2 மாதங்களுக்கு பொது மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என்றார். கேரளா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருவோருக்கு   இ-பாஸ் கட்டாயம் என்றும் மற்ற மாநிலங்களின் நிலையை பொருத்து  இ-பாஸ் முறை நாளுக்குநாள் மாறுப்படும் என்றார்.  

இதற்காக சோதனைச்சாவடிகள் அமைக்கப்படாது என கூறிய அவர், கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் இருக்கும் நிலையில் 10 தெருக்களில் தான் கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டிருப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்தால் நோய் பரவல் குறையும் என்றும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும் என்றும் இதுவரை மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

 

click me!