திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம்தான் நடக்கும்.. எச்சரித்த அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2021, 1:59 PM IST
Highlights

நான் சவால் விடுகிறேன்.என் பெயரைச் சொல்லி என் உறவினர்களோ, நண்பர்களோ எந்த முறைகேடிலாவது ஈடுபட்டார்களா?  என ஒன்றைச் சொல்ல முடியுமா? நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்.  

என் பெயரைச் சொல்லி என் உறவினர்களோ, நண்பர்களோ இந்த முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று ஒன்றையாவது சொல்ல முடியுமா? என தான்  திமுகவுக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன் எனவும், அதிமுக ஆட்சியில் ஏதேனும் குறுக்கீடுகள், தலையீடுகள் இருந்தது என சொல்ல முடியுமா எனவும் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தர்மம் தலைகாக்கும் என தர்மத்தின் வழியே சென்று கொண்டு இருக்கிறோம் என்றார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவில் வளாகத்தில் இன்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகர, கிராமப்புற கட்சியின் கிளை கழகச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணி மாவட்ட, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து தலை விரித்தாடும். ரவுடியிசம் தலைவிரித்தாடும். அதிகாரிகள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். இன்று அம்மாவுடைய அரசில், அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அரசு விதிமுறைகளின் படி, அதிகாரிகளின் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டு, அனைத்து வேலைகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

மக்களிடம் மனுக்களை வாங்குகிறார், இந்த மனுக்களின் மீது அவர் முதலமைச்சர் ஆன பிறகு, குறைகளைத் தீர்ப்பாராம், சொல்வதைப் பொருத்தமாக சொல்ல வேண்டாமா? ஊர் ஊராக எங்கள் மக்கள் பணியாளர்கள் வருவார்கள். தீர்ப்பார்கள் எனச் சொல்லலாம். அவர்கள் வரப் போவதும் இல்லை, எதுவும் நடக்கப் போவதும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசுகிறார். மக்களுக்காக அவர் இதுவரை எதையும் செய்யவில்லை. இனியும் எதையும் செய்யப் போவதில்லை. நீங்க செஞ்சதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா? நீங்க கட்டப் பஞ்சாயத்துப் செய்ததையும், நில அபகரிப்பு செய்ததையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. பொய் பேசுவதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். பத்தாண்டுகளில் அவர்கள் செய்ததை, மக்கள் மறந்திருப்பார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் மக்கள் மறக்கவில்லை. 

அரசு சொத்தை கொள்ளையடித்ததை, கொலைச் செய்ததை,  கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு செய்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைக்கிறார்கள். நான் ஒரு சாமானியன், உதயகுமாராகிய நான் 2011 முதல் 2021 வரை பத்தாண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். நான் சவால் விடுகிறேன்.என் பெயரைச் சொல்லி என் உறவினர்களோ, நண்பர்களோ எந்த முறைகேடிலாவது ஈடுபட்டார்களா?  என ஒன்றைச் சொல்ல முடியுமா? நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஏதேனும் குறுக்கீடுகள், தலையீடுகள் எனது பெயரைச் சொல்லி இந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்திருக்கிறதா? அப்படி சொல்ல முடியுமா? தர்மம் தலைகாக்கும் என தர்மத்தின் வழியே சென்று கொண்டு இருக்கிறோம். என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

 

click me!