வேலூர், தஞ்சாவூரில் திமுகவுடன் மல்லுக்கட்டு... ஒதுங்கிக் கொண்ட அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2019, 5:54 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் கடைசியாக இணைந்த தமாகாவுக்கு ஒது தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் கடைசியாக இணைந்த தமாகாவுக்கு ஒது தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமாகா தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த ஜி.கே.வாசன் ‘’நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது.அதன்படி தஞ்சாவூரில் போட்டியிட உள்ளோம்’’ என அவர் தெரிவித்துள்ளார். அங்கு தமாகா சார்பில் ஜி.கே.வாசன் களமிறங்க உள்ளார். திமுக சார்பில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் களமிறக்கப்படுகிறார். தற்போது அதிமுகவை சேர்ந்த பரசுராமன் எம்.பியாக இருக்கிறார்.

 

அவருக்கு முன் திமுகவை சேர்ந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தொடர்ந்து 5 முறை தஞ்ச்சாவூர் தொகுதியில் எம்.பியாக வெற்றிபெற்றவர். பலம் பொருந்திய எஸ்.எஸ்.பழனிமாணிக்கதை, ஜி.கே.வாசன் வெற்றிபெறுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் இதுவரை நடந்துள்ள 16 மக்களவை தேர்தலில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 7 முறையும் வென்றுள்ளது. அதிமுக இருமுறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி பின்புலத்தில் இருந்து வந்த ஜி.கே.வாசனை தஞ்சாவூர் மக்கள் ஆதரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தஞ்சாவூரில் திமுகவுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதை மனதில் கொண்டே தமாகா கேட்டவுடன் அந்த தொகுதியை விட்டுக் கொடுத்து அதிமுக ஒதுங்கிக் கொண்டுள்ளது. 

அதேபோல் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டண்இயில் இடம்பெற்றுள்ள புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களமிறங்க உள்ளார். இந்தத் தொகுதியும் சிக்கலானது என்பதால் அதிமுக விட்டுக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டுள்ளது.  

click me!