இரட்டை இலை வழக்கு... விசாரணை அமர்வு அறிவிப்பு..!

Published : Mar 14, 2019, 05:44 PM ISTUpdated : Mar 14, 2019, 06:16 PM IST
இரட்டை இலை வழக்கு... விசாரணை அமர்வு அறிவிப்பு..!

சுருக்கம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. 

இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என நீதிபதிகள் கூறினர். மேலும் தினகரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 15-ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

இந்த விசாரணையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு  மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரிய வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!