பொள்ளாச்சி விவகாரம்... அணுகுண்டை தூக்கிப்போட்ட தினகரன்...!

Published : Mar 14, 2019, 05:17 PM IST
பொள்ளாச்சி விவகாரம்... அணுகுண்டை தூக்கிப்போட்ட தினகரன்...!

சுருக்கம்

மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும் என டி.டி.வி.தினகரன்  தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும் என சசிகலாவை சந்தித்த பிறகு டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது என்றார். 

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சில் பதற்றம் தெரிகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும் டிடிவி தினகரன் கூறினார். மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீதான தடியடிக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும். அப்போது உண்மைகள் வெளிவரும் என டிடிவி தினகரன் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!