கதறும் கதிர் ஆனந்த்... வேலூர் கோட்டையை கைப்பற்றுகிறது அதிமுக..?

By vinoth kumarFirst Published Aug 9, 2019, 11:27 AM IST
Highlights

வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது 8,605 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதியில் இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது 8,605 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். 

வேலூர் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது. 

இந்நிலையில், 11 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,03,151 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,94,546 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 10,184 வாக்குகளும் பெற்றிருந்தனர். 7-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 8605 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். நோட்டாவுக்கு 1461 வாக்குகள் கிடைத்துள்ளன. இதனிடையே, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

click me!