’ஒண்ணு இல்ல... ரெண்டு இல்ல... மூனா பிரிக்கணும்...’ குபீர் கிளப்பும் டாக்டர் ராமதாஸ்..!

Published : Jan 08, 2019, 03:58 PM ISTUpdated : Jan 08, 2019, 04:00 PM IST
’ஒண்ணு இல்ல... ரெண்டு இல்ல... மூனா பிரிக்கணும்...’  குபீர் கிளப்பும் டாக்டர் ராமதாஸ்..!

சுருக்கம்

தமிழகத்தையே இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது வேலூர், திண்டிவனம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தையே இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது வேலூர், திண்டிவனம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக இன்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் திண்டிவனத்தை தனியாக பிரிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில் "விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னொரு காலத்தில் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தி வந்தார் ராமதாஸ். தற்போது திண்டிவனம், வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருகிறார். அந்ததந்த மாவட்டங்களை சேர்ந்த பலரும் தங்களது மாவட்டங்களை பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கைன் விடுத்து வருகின்றனர்.  
 
PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!