வாகனங்களை தாமதம் செய்யாமல் காரணம் கேட்டு அனுப்பிவிட வேண்டும். போக்குவரத்து போலீசாருக்கு கூடுதல் ஆணையர் அட்வைஸ்

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 5:19 PM IST
Highlights

ஊரடங்கு தளர்வுகள் விதிக்கப்பட்டாலும் சாலகளில் வரும் மக்களை சோதனை மேற்கொள்வது காவல் துறையினரின் கடமை எனவும் அவற்றை இடைஞ்சலாக பார்க்காமல் மக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் விதிக்கப்பட்டாலும் சாலகளில் வரும் மக்களை சோதனை மேற்கொள்வது காவல் துறையினரின் கடமை எனவும் அவற்றை இடைஞ்சலாக பார்க்காமல் மக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டுப் பகுதியில் உள்ள ஈகா திரையங்கம் சிக்னலில் போக்குவரத்துக் காவலர்களுக்கான மருத்துவ முகாமை புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சென்னை பெருநகரைப் பொறுத்தவரை 115 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அவர்களின் நலனுக்காக அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே நடமாடும் மருத்துவக் குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைகளும் பணியிடங்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். காவல் துறையினருக்கு மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக தேவை என்ற அவர், சாலைகளில் வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்று வருகிறதா என கண்காணிப்பது காவல் துறையினரின் கடமை எனவும், அதை பொதுமக்கள் இடைஞ்சலாக பார்க்கக்கூராது எனவும் தெரிவித்தார். மேலும் காவல் துறையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும் காலை நேரங்களில் மக்களின் இடைஞ்சலை குறைக்கும் பொருட்டு ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவிசிய வாகனங்கள் செல்ல சாலைகளில் தனித் தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மக்களின் சிரமத்தைக் குறைக்க மேம்பாலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வுகளால் போக்குவரத்து அதிகரித்தாலும், அத்தியாவிசியத் தேவைகளுக்காக செல்லும் வாகனங்களை தாமதம் செய்யாமல் காரணத்தை கேட்டு காவல் துறையினர் அனுப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மற்றபடி மக்கள் தேவையான காரணங்களுக்காக மட்டும் வெளியில் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

click me!