கிராமப் புறங்களில் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்…. எடப்பாடி அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2018, 10:58 PM IST
Highlights

எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் கிராமப் புறங்களில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்கட்சியினர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்றும், அவர்களது சதி சூழ்ச்சிகளை கடந்து இந்த விழா இன்று நடைபெற்றதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, எம்.ஜி.ஆரின். அருமை பெருமைகள் பற்றி பேசினார்.

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு சூழல் நிலவும் மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாகவும், அதிமுக அரசால் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் முதலாமைச்சர் கூறினார். அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு என்றார்.

ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்படுகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்ததோ அப்படிதான் தற்போதும் உள்ளது. சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆடம்பர விழா இல்லை என்றும், மக்கள் நலனுக்கான விழா என்றும் அவர் கூறினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறோம். வடசென்னை மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

சென்னையில் உலகத் தரமான பன்னாட்டு விமானநிலையம் அமைக்கப்படும் என்றும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதலமைச்சர் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக மக்களுக்காக உருவான கட்சி என்றும், மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி என்றும் கூறினார். அதிமுக ஆட்சி சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சியினர் இந்த விழாவுக்கு எதிராக சதி செய்தார்கள். சதி சூழ்ச்சிகளை கடந்து இந்த விழா நடைபெற்றதாக கூறினார்.

click me!