ஸ்டாலின் இனி முதல்வராக முடியாது... வைகோவும் தூங்க முடியாது! ஓ.பி.எஸ். எகத்தாளம்!

By vinoth kumarFirst Published Sep 30, 2018, 6:29 PM IST
Highlights

மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் நான் தூங்கமாட்டேன் என்று கூறிய மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு இனி என்றுமே தூக்கம் கிடையாது என்றும் ஏனென்றால் ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார் என்றும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் நான் தூங்கமாட்டேன் என்று கூறிய மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு இனி என்றுமே தூக்கம் கிடையாது என்றும் ஏனென்றால் ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார் என்றும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை துணை தலைவர் தம்பிதுரை மூலம் அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் அரசின் கௌரவத்தை ஏற்றுக் கொள்ளாமல், விழாவில் பங்கேற்காததற்கு ஏதேதோ காரணம் சொல்லி அறிக்கை விட்டிருக்கிறார். எம்ஜி.ஆரின் விழாவில், அவரது அருமை பெருமைகளைப் பேசுவதை விட, திமுகவையும் கருணாதியையும் கடுமையாக விமர்சிப்பதாகவும், எனவே இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியா உதவியது என்று அண்மையில் இந்தியா வந்த ராஜபக்சே கூறியுள்ளார். இதனை ஜெயலலிதா அப்போதே கூறியிருந்தார். இலங்கைக்கு உதவி செய்தது யார் என்றால் காங்கிரசும் - திமுக கூட்டணிதான். கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் நிலம்.

 

அது தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. தமிழகத்தின் நலன் காக்கும் ஒரே கட்சி அதிமுகவாகும். இலங்கையின் செயலை கட்டுப்படுத்தும் சக்தி திமுக காங்கிரசிடம் இருந்தும் அவற்றை அவர்கள் செய்யவில்லை.  

வைகோ கூறும்போது, நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலினை முதலமைச்சராக்க முடியாது என்று கூறி வந்தார். இப்போது ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் தூங்கமாட்டேன் என்கிறார். அப்படி என்றால் வைகோவுக்கு தூக்கமே போச்சு... ஏன் என்றால் எந்த காலத்துக்கும் அவர் முதலமைச்சராக முடியாது. அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக வளர்த்து வந்துள்ளார் ஜெயலலிதா. எத்தனை மெகா கூட்டணி ஏற்பட்டாலும், அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு உண்டு என்று ஓ.பி.எஸ். கூறினார்.

click me!