வீரசவார்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தானே இருந்திருக்காது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு

By Selvanayagam PFirst Published Sep 18, 2019, 8:35 PM IST
Highlights

சுதந்திரம் அடையும் போதும் நாட்டின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால், பாகிஸ்தான் இருந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த நாட்டுக்கு செய்த சேவை செய்தார்கள் இதை நாங்கள் மறக்கவில்லை. ஆனால், வீரசவார்க்கும் தேசத்துக்கு போராடியுள்ளார். வீரசவார்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

ஜவஹர்லால் நேரு அவர் 14 நிமிடங்கள் சிறையில் இருந்த துணிச்சல் மிக்கவர் என்றால் வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீரசாவர்க்கர் பற்றி தரக்குறைவாகவிமர்சனங்கள் செய்திருந்தார். அவர்  இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க ஒருநகலை அனுப்பி வைக்கிறோம், அவர் படிக்கட்டும் இந்த புத்தகத்தை ஒவ்வொரு எம்.பி.யும், எம்எல்ஏவும் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்


சுதந்திரம் அடைந்தபோது வீரசவார்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒருநாடே இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்

click me!