ஹெச்.ராஜாவை அமைச்சர் ஆக்கிடாதீங்க... அலறும் ஓசிசோறு புகழ் கி.வீரமணி..!

By vinoth kumarFirst Published May 31, 2019, 2:25 PM IST
Highlights

முன்வாசலில் தோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புறம் வழியாக மத்திய அமைச்சராக்குவது, ஆட்சியமைக்க வழிவகுப்பது என அனைத்தும், கழிவுப் பொருட்களை இலையில் பரிமாறுவதற்கு சமம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்வாசலில் தோல்வி அடைந்தவர்களை, கொல்லைப்புறம் வழியாக மத்திய அமைச்சராக்குவது, ஆட்சியமைக்க வழிவகுப்பது என அனைத்தும், கழிவுப் பொருட்களை இலையில் பரிமாறுவதற்கு சமம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று 2-முறையாக பிரதமர் மோடி பதவியேற்றுள்ளார். ஆனால் அதிமுக கூட்டணி இடம்பெற்ற பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

 

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக சார்பில் ஹெச்.ராஜா அல்லது தமிழிசைக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இந்த தகவலை அறிந்த கி.வீரமணி அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், ’’பிரதமர் மோடிக்கும், அவரது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள். பாஜக ஒரு தனிச் சுதந்திரத்துடன் இயங்கும் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். இந்த முறை தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும்,  ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஆணையை ஏற்று தான் நடக்கவேண்டிய கட்டாயம் உண்டு. 

தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை மாநிலங்கள் அவை மூலம் மத்திய அமைச்சராக்குவது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவதாகும். அவ்வாறு தோல்வி அடைந்தவர்களை மீண்டும் அமைச்சர் பொறுப்பில் வைப்பது, கழிவு பொருட்களை இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும். எனவே தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை மாநிலங்களவை வேட்பாளராக ஒப்புக்கொள்ள மாட்டோம் என்ற ஆரோக்கியமான அரசியல் உருவாக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.  மறைமுகமாக ஹெச்.ராஜாவை குறிப்பட்டு இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஹெச்.ராஜா ஆதரவாளர்கள் கி.வீரமணி மீதும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். 

click me!