வீரமணியை ஓட ஓட விரட்டிய இந்து முன்னணியினர் ! காலணி வீசி கலவரம் ! 2 பேர் மண்டை உடைப்பு !!

Published : Apr 04, 2019, 10:35 PM IST
வீரமணியை ஓட ஓட விரட்டிய  இந்து முன்னணியினர் ! காலணி வீசி கலவரம் ! 2 பேர் மண்டை உடைப்பு !!

சுருக்கம்

திக தலைவர் கி.வீரமணி திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றபோது அங்கு புகுந்த இந்து முன்னணியினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது.

அண்மையில் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூடடத்தில் பங்கேற்ற திக தலைவர் வீரமணி இந்து கடவுள்களை அவமதிக்கும் கவையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கூட வீரமணியை பிரச்சாரத்துக்கு அழைக்க மறுத்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க இன்று வந்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்.

அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!