மாணவர்களுக்காக இந்த எம்.பி. என்ன செய்தார் தெரியுமா ? பொது வெளியில் உண்மையை போட்டுடைத்த சரத்குமார் !!

By Selvanayagam PFirst Published Apr 4, 2019, 9:22 PM IST
Highlights

பொள்ளாச்சி எம்.பி.மகேந்திரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்காக இலவசமாக கொடுத்தவர் என தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
 

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  சி.மகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், வளர்ச்சி பாதையில் வருங்கால சமுதாயத்தை கொண்டு செல்ல வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடக்கிறது. இந்த மெகா கூட்டணி அமைந்தவுடன் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்து விட்டது. 17 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தத? என கேள்வி எழுப்பிய அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த போதும், பதவியில் இருக்கும் போதும் மதவாத கட்சி என்று தெரியாதா?  என்றும் வினவினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அப்போது வைகோ, காங்கிரசும், தி.மு.க.வும்தான் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு காரணம் என்று சொன்னார். இன்றைக்கு அவர் பதவி கிடைக்குமா? என்று அந்த கூட்டணியில் சேர்ந்து விட்டார் என கிழித்து தொங்கவிட்டார்.

அதிமுக வேட்பாளர் மகேந்திரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக கொடுத்தவர் என்றும், , தென்னை விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் என்றும் பாராட்டித் தள்ளினார். பள்ளிக்காக நிலம் கொடுத்த விவகாரம் இரு வரை யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது அந்த உண்மையை சரத்குமார் உடைத்துச் சொல்லி வாழ்த்தினார்.

click me!