அந்த 4 தொகுதிகளுக்கும் எப்போ தேர்தல் ? தேர்தல் ஆணையம் என்ன சொல்லுது தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Apr 4, 2019, 10:04 PM IST
Highlights

திருப்ரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் ஓசூர் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அத்காரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் சென்னை வந்தனர்.

இதைத் தொடர்ந்து  தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆகியோர்  செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது  பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பறக்கும்படையினர் சாதாரண மக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. தேர்தல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் பூத் சிலிப் மூலம் வாக்காளிக்க முடியாது.  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். மோசடிகள் குறித்து சி-விஜில் ஆப் மூலம் அனைவரும் புகைப்படம், வீடியோக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம். பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் மக்களவை தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும் என அவர்கள் தெரி/வித்தனர்.

தொடர்நது பேச்ள அவர்கள்  தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அசோக் லவசா தெரிவித்தார்

click me!