3 முறை எம்எல்ஏவாக இருந்த திமுகவின் முக்கிய பிரமுகர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் கலங்கிய ஸ்டாலின்..!

Published : Sep 21, 2020, 10:57 AM IST
3 முறை எம்எல்ஏவாக இருந்த திமுகவின் முக்கிய பிரமுகர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் கலங்கிய ஸ்டாலின்..!

சுருக்கம்

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் மா.மீனாட்சிசுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மீனாட்சிசுந்தரம் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மீனாட்சிசுந்தரம் உயிரிழந்தார். இவரது மறைவு திமுக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த மீனாட்சிசுந்தரத்திற்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திமுக சார்பில் மீனாட்சிசுந்தரத்திற்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!