திமுகவுடன் கூட்டணி வைத்ததால் வந்த விணை... அதிர்ச்சியில் திருமா..!

Published : Apr 03, 2019, 02:44 PM IST
திமுகவுடன் கூட்டணி வைத்ததால் வந்த விணை... அதிர்ச்சியில் திருமா..!

சுருக்கம்

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் ரூ.2.10 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராஜா என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் ரூ.2.10 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராஜா என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன. கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் துரைமுருகனின் நண்பர் வீட்டில் உள்ள சாக்கு மூட்டையில் 10 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் காரில் மறைத்து வைத்து எடுத்துச்செல்வதாக பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எங்கிருந்து யாருக்காக எடுத்துச்செல்லப்பட்டது என்பது குறித்து தங்கதுரை மற்றும் பிரகாகரன் ஆகியோரை கைது அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். ராஜாவுக்கு எல்பின் என்ற சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Annamalai Goes Viral: "வீடியோ எடுக்காதீங்க... வேலை செய்யுங்கள்!" – வைகை கரையில் அண்ணாமலை வைரல்
Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!