சவால்களுக்கே சவால் விடும் மோடி..! அசைக்க முடியாத நம்பிக்கையோடு பிரச்சார உரை..!

Published : Apr 03, 2019, 02:36 PM ISTUpdated : Apr 03, 2019, 02:38 PM IST
சவால்களுக்கே சவால் விடும் மோடி..! அசைக்க முடியாத நம்பிக்கையோடு பிரச்சார உரை..!

சுருக்கம்

எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதனை முழுமூச்சுடன் முடித்து காட்டுபவன் தான் என்றும், சவாலுக்கே சவால் விடுபவன் நான் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதனை முழுமூச்சுடன் முடித்து காட்டுபவன் தான் என்றும், சவாலுக்கே சவால் விடுபவன் நான் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாசி காட்டில் வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, தான் எத்தகைய கடினமான வேலையாக இருந்தாலும் எடுத்து முடிக்க கூடியவன் என்றும், சவால்களுக்கே சவால்விடும் நபர் தான் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும் பாஜக ஆண்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே தெரிவித்து இருந்தபடி அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாக கூற முடியாவிட்டாலும் நான் என்றைக்கும் விடுமுறை எடுத்து, தேவையில்லாத கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கியது கிடையாது.

 நான் ஒரு நாளாவது விடுமுறை எடுத்தேன் என நீங்கள் என்றாவது கேள்விப்பட்டது உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பற்றி பேசிய மோடி காங்கிரஸைப் போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் மோசடியானது. நேர்மைக்கு புறம்பாக பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர் என குற்றம் சாட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 

இதனைத் தொடர்ந்து இன்று மாலையே மேற்குவங்கத்தில்பிரிக்கெட் மைதானத்தில் இன்று தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் உரையில் ஈடுபடவுள்ளார் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!