இது தாண்டா தமிழக அரசியல் பண்பாடு.. கமல் குணமடைய வாழ்த்து தெரிவித்து பழங்கள் கொடுத்து அனுப்பிய வானதி சீனிவாசன்

Published : Mar 21, 2021, 12:24 PM IST
இது தாண்டா தமிழக அரசியல் பண்பாடு.. கமல் குணமடைய வாழ்த்து தெரிவித்து பழங்கள் கொடுத்து அனுப்பிய வானதி சீனிவாசன்

சுருக்கம்

காலில் காயம் ஏற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரைவில் குணம் பெற வாழ்த்து தெரிவித்து அவருக்கு எதிராக போட்டியிடும் வானதி சீனிவாசன் பழக்கூடையும் தனது வாழ்த்து கடிதத்தையும் அனுப்பியுள்ளார். 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தலிலங போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில்  தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசன் நேற்று காலை பூ மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பலர் அவருடன் பேசவும், செல்பி எடுத்துக் கொள்ள முற்பட்ட போது சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் அடிபட்டத. இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற கமல் சிகிச்சை எடுத்துக் கொண்டார். காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்றைய பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், கமல் விரைவில் குணமடைய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;- கோவை பகுதியில் விருந்தினராக வந்து இருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க கூறியிருப்பதாக அறிந்தேன். இதன், காரணமாக அவர் விரைவில் குணமடைய கோவை மாவட்ட தலைவர் நந்தகுமாரிடம் ஒரு பழக்கூடை அனுப்பியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!