ஜெயலலிதா மரணம்... தேர்தல் சமயத்தில் சர்ச்சையை கிளப்பும் உதயநிதி..!

Published : Mar 21, 2021, 12:19 PM IST
ஜெயலலிதா மரணம்... தேர்தல் சமயத்தில் சர்ச்சையை கிளப்பும் உதயநிதி..!

சுருக்கம்

10 வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்ய போகிறதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  

10 வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்ய போகிறதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘’சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுயில் அ.தி.மு.கவினர் வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளோம், நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

ஜெயலலிதா இரும்புப்பெண் என்கிறார்கள். மரணத்தை ஓபிஎஸ் கொச்சைப்படுத்துகிறார். சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆணையம் அமைத்து விசாரிப்பது அ.தி.மு.க தான், மூன்றாண்டுகளாகியும் உண்மை வெளிவராததால் தான் நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா இரும்புப்பெண் என பெருமையாக பேசுகின்றனர். திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக அவர் இறந்துவிட்டாரா என்ன?

அ.தி.மு.க கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.கவின் சிஏஏ குறித்த அறிவிப்பை ஏற்க முடியாது என பா.ஜ.க மறுத்துவிட்டது. பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்ய போகிறது ? என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!