ஜெயங்கொண்டத்தில் ஜெயிக்கப்போது யார்? பாமகவுக்கு டப் கொடுக்கும் குருவின் மனைவி..!

By vinoth kumarFirst Published Mar 21, 2021, 11:47 AM IST
Highlights

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவுக்கு பாடம் புகட்ட வழக்கறிஞர் பாலுவை எதிர்த்து ஐ.ஜே.கே சார்பில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். இதனால், பாமகவிற்கும் குருவின் மனைவிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவுக்கு பாடம் புகட்ட வழக்கறிஞர் பாலுவை எதிர்த்து ஐ.ஜே.கே சார்பில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். இதனால், பாமகவிற்கும் குருவின் மனைவிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். பாலு இந்தத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக சார்பில் கேஎஸ்கே. கண்ணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாமகவை வழிவாங்கும் நோக்கில் பாலுவை எதிர்த்து மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனையடுத்து, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளரான சொர்ணலதா இளைஞர்கள் படையுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கனலரசன் உடனிருந்தனர்.

இந்நிலையில், வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் அனல் தெறிக்கும் பேச்சுக்களால் பரபரத்த ஜெயங்கொண்டம் தொகுதி, இன்று அவரது மனைவி சொர்ணலதா, மகன் கனலரசன் ஆகியோரின் பரப்புரைகளால் பாமகவினர் மிரண்டுபோயுள்ளது. அதேநேரத்தில், வழக்கறிஞர் பாலுவும் தேர்தல் வியூகத்தை மாற்றி அதிரடி காட்டி வருகிறார். இதனால், ஜெயக்கொண்டத்தில் பாமகவுக்கும் குருவின் மனைவிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  

click me!