ஓபிஎஸை நம்பி ஏமாந்ததும் போதும்.. நடையை கட்டுவோம்.. அதிமுகவின் முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்தார்..!

By vinoth kumarFirst Published Mar 21, 2021, 11:11 AM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மதுரை திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராலிங்கம். இவர், 1996 மற்றும் 2011 ஆகிய தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தார். இவர் ஆரம்ப காலத்தில் திமுகவில் மு.க.அழகிரி ஆதரவாளராக இருந்து வந்த நிலையில் பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்ததும் 2009ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா இவருக்கு வாய்ப்பு வாங்கினார். ஆனால், அழகிரியின் திருமங்கலம் பார்முலாவால் இவர் தோல்வியடைந்தார்.

ஆனாலும், 2011ம் ஆண்டு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட இவருக்கு இதே தொகுதியில் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினர். அதில் வெற்றிபெற்றார்.அதிமுகவில் எம்எல்ஏவாக, புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக செல்வாக்குடன் முத்துராமலிங்கம் வலம் வந்தார். அதன்பின்பிறகு கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் இவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்குப் பதிலாக ஆர்பி.உதயகுமாருக்கு சீட் வழங்கப்பட்டது. அவர் வெற்றிபெற்ற அமைச்சரானார். இவரிடம் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ராஜன் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதா இறந்தபிறகு தீவிர ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். இதனையடுத்து, மக்களவை தேர்தலில் சீட் கேட்டும் ஓபிஎஸ் இவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தார். ஆனால், சீட் மறுக்கப்டப்டது. இதனால், அதிருப்தியில் இருந்த முத்துராலிங்கம் திருமங்கலம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

click me!