அதிமுகவில் வளர்மதி, வைகைச்செல்வனுக்கு புதிய பதவி... ஓபிஎஸ்-இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Published : Jul 23, 2021, 10:11 PM IST
அதிமுகவில் வளர்மதி, வைகைச்செல்வனுக்கு புதிய பதவி... ஓபிஎஸ்-இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

சுருக்கம்

அதிமுகவின் மகளிரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் இலக்கிய அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகிய இருவரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.


அதிமுக மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி நியமிக்கப்படுகிறார். மகளிர் அணி இணைச் செயலாளராக மரகமதம் குமரவேல் நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி செயலாளராக வைகைச் செல்வன் நியமிக்கப்படுகிறார். வர்த்தக அணி செயலாளராக V.N.P.வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார். இணைச்செயலாளராக ஆனந்தராஜ் நியமிக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!