மறைந்த மாமனிதன் வாஜ்பாயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...?

By manimegalai aFirst Published Aug 19, 2018, 1:23 PM IST
Highlights

முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த 16 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
 

முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த 16 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.

இவருடைய உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், பசுஞ்சாண வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு எரியூட்டப்பட்டது. வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது பேத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார். 

இவரின் மறைவை தொடர்ந்து, இவரை பற்றிய பல அறிய தகவல்கள் வெளியாகி வருகிறது. பல அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் அவருடைய பேசி பழகிய பொன்னான நேரங்கள் குறித்து, பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு கணக்கின் படி, வாஜ்பாயின் சொத்து மதிப்பு 58 லட்சம் ஆகும். இவருக்கு சொந்தமாக தில்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அபார்ட்மெண்டில் ஒரு பிளாட் உள்ளது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம். மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாரம்பரிய வீடு உள்ளது அந்த வீட்டின் மதிப்பு 6 லட்சம் என கூறப்படுகிறது.

மேலும் தில்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3.90 லட்சம் சேமிப்பாக உள்ளது. மற்றொரு கணக்கில் ரூ.25 லட்சம் வைத்துள்ளார். சேமிப்பு பத்திரங்கள் ரூ.1.2 லட்சம் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக தற்போது இவருடைய சொத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் என தெரியவந்துள்ளது.
 

click me!