திருப்பரங்குன்றம், திருவாரூரும் நமக்கு தான் ! சசிகலாவிடம் சபதம் செய்த டி.டி.வி!

By vinoth kumarFirst Published Aug 19, 2018, 12:43 PM IST
Highlights

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த டி.டி.வி தினகரன் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதியிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று சபதம் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று 65வது பிறந்த நாள்.

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த டி.டி.வி தினகரன் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதியிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று சபதம் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று 65வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு டி.டி.வி தினகரன் நேற்று பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தார். சசிகலா கால்களில் விழுந்து தினகரன் அப்போது ஆசி பெற்றுள்ளார். தினகரனை ஆசிர்வாதம் செய்த சசிகலா பெரிய அளவில் அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கலைஞர் மறைவை தொடர்ந்து தி.மு.கவில் என்ன நிலவரம் என்று மட்டும் தினகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்டாலின் கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், அழகிரி எவ்வளவோ முயன்றும் கட்சியின் கட்டுப்பாடு தொடர்கிறது என்று மட்டும் தினகரன் பதில் அளித்துள்ளார். நம் கட்சியில் நம்மால் வளர்ந்தவர்கள் செய்த துரோகத்தை போல் தி.மு.கவில் துரோகம் செய்ய யாரும் இல்லை. எனவே தி.மு.க உடைய வாய்ப்பில்லை என்றே தினகரன் சசிகலாவிடம் கூறியுள்ளார்.

 அதற்கு அப்படி நினைக்க வேண்டாம் நிச்சயம் நம் கட்சியை உடைத்தவர்கள் தி.மு.கவிற்கு எதிராகவும் காய் நகர்த்துவாக்ள், அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறும் என்று சசிகலா தினகரனிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தல் பணிகளை துவங்கிய தகவலை சசிகலாவிடம் தினகரன் கூறியுள்ளார். அப்போது வேட்பாளர் தேர்வில் கவனம் தேவை, என்னை கேட்காமல் வேட்பாளரை அறிவிக்க கூடாது என்று தினகரனிடம் சசிகலா கண்டிப்பாக தெரிவித்துள்ளார். அதற்கு நிச்சயமாக திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதியில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகரில் வென்றதை விட கூடுதல் வாக்குகளில் இரண்டு தொகுதிகளிலும் வெல்வது உறுதி என்று சசிகலாவிடம் தினகரன் சபதமே செய்ததாக கூறப்படுகிறது. தனை கேட்டுக் கொண்ட சசிகலா, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், எந்த நேரத்திலும் அந்த வழக்கை வைத்து நம்மை வீழ்த்துவார்கள் என்று சசிகலா கூறியுள்ளார். அதற்கு சரி என்று தலையாட்டிவிட்டு தினகரன் சிறையில் இருந்து புறப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

click me!