சாகும் வரை எய்ம்ஸ் என்ற அரசு மருத்துவமனை சிகிச்சையில் வாஜ்பாய் ...

By sathish kFirst Published Aug 17, 2018, 12:17 PM IST
Highlights

நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக தனது 93வது வயதில் காலமான இவருக்கும் இந்தியாவே அஞ்சலி செலுத்தி வருகிறது.

என்ன தான் நாட்டில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளி என்று அரசின் சேவைகள் இருந்தாலும் அங்கு பெரும்பாலான மக்கள் விரும்பி செல்வது இல்லை. தரம் இன்மை எனும் காரணத்தை சொல்லி தனியார் சேவைகளை தான் அதிக பொருள் செலவில் ஏற்று கொள்கின்றனர். 

இந்த விஷயம் பொது மக்களுக்கு மட்டும் அல்ல இது போன்ற சேவைகளை துவக்கி வைத்து நடத்தும் அரசி அதிகாரிகளுக்கும் பெரிய பெரிய தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
அவர்கள் வழங்கிய சேவைகள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தான் இது போன்ற செயல்கள் காட்டுகின்றனர். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போது மறைந்த செல்வி ஜெயலலிதா கூட அப்பல்லோ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். 
அதே போல ஐந்துமுறை தமிழக முதல்வராக இருந்த திராவிடக்கட்சியின் மூத்த தலைவர் கருணாநிதியும் காவேரி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். 
ஆனால் இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரும் , முன்னாள் பிரமருமாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசு மருத்துவமனையான எய்ம்ஸ்-ல் தான் சிகிச்சை பெற்று வந்தார். 

நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக தனது 93வது வயதில் காலமான இவருக்கும் இந்தியாவே அஞ்சலி செலுத்தி வருகிறது. இவர் ஆட்சியில் இருந்த போதும் சரி இப்போதும் சரி எளிமையை கடைபிடித்தவர் என்பதற்கு அவரின் இந்த செயல்பாடே ஒரு சிறந்த உதாரணம். 

அரசு சேவைகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும், எனக்கான சேவையை இந்திய குடிமகனாக நான் பெற்றுகொள்வேன் எனும் அவரின் உரிமையும் அனைத்து இந்திய மக்களையுமே அவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறது. இதே போல எல்லா அதிகாரிகளும் செயல் பட்டால் அரசு சேவைகளின் தரம் மேலும் உயர்ந்திடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வாஜ்பாய் போல தழகத்திலும் ஒரு அமைச்சர் இருந்தா அவர்தான், பக்தவத்சலம்  அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன்,  இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அரசுப் பேருந்தில் பயணிப்பதும் வரிசைகளில் காத்திருப்பதும்  என வாழ்ந்து வந்தார்.

click me!