அரசியல் சுழலில் சிக்கும் செந்தில் ராஜலக்ஷ்மி!! ஒரு கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை!!!

By sathish kFirst Published Aug 17, 2018, 11:45 AM IST
Highlights

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை எய்ஸ்மருத்துவமனையில் வைத்து காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை எய்ஸ்மருத்துவமனையில் வைத்து காலமானார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்களும் , பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
விஜய் தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமடைந்திருக்கும் செந்தில் ராஜலஷ்மி தம்பதியினரும் வாஜ்பாயின் மறைவிற்கு தங்களுடைய முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். 

அந்த இரங்கல் செய்தியை அவர்கள் தெரிவித்திருக்கும் விதம் திமுகவினை நேரடியாக சாடுவதை போல அமைந்திருக்கிறது. 
பஸ் மறியல் இல்லை! ரயில் மறியல் இல்லை! பிரியாணிக்கு பாக்ஸிங் இல்லை! வாரிசு அரசியல் சண்டை இல்லை! சொத்து பிரச்சனை இல்லை! ஊழல் புகார் இல்லை! புதைக்க இந்த இடம் தான் வேண்டும் என கேட்கவில்லை! அரசியல்வாதினா இப்படி தான் இருக்கனும். உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியின் மூத்த தலைவர் வாஜ்பாய் என கூறி அவருக்கு இரங்கல் செலுத்தி இருக்கின்றனர் செந்தில் ராஜலக்ஷ்மி. 


இதில் அவர்கள் குறிப்பிட்டிட்ருக்கும் பெரும்பாலான விஷயங்கள் திமுக விற்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியாணி கடையில் சமீபத்தில் திமுக நிர்வாகி பாக்ஸிங் செய்து கடை ஊழியரை தாக்கிய விவகாரம். அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அரசியல் வாரிசு சண்டை, கருணாநிதிக்கு மெரினாவில் தான் இடம் வேண்டும் என போராட்டம் நடத்தியது, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார், இப்படி ஒவ்வொரு வரியிலும் திமுகவை தாக்கி பேசி இருக்கின்றனர் இந்த பதிவில்.

அதே போல பாஜகவை உலகிலேயே மிகப்பெரிய கட்சி என கொஞ்சம் அதிகப்படியாக வேறு கூறி இருக்கின்றனர். அவர்கள் கூறியதில் பல உண்மைகள் இருந்தாலும் அதை இரங்கல் செய்தி தெரிவிக்கும் போது கூறி இருக்க வேண்டாம் என்பது பலரின் கருத்தாக அமைந்திருக்கிறது. விஜய் தொலைகாட்சியில் வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர்கள் எ.ஆர்.ரஹ்மான் D.இமான் போன்ற முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றனர். வளர்ந்து வரும் இவர்கள் திமுக தலைவரின் குடும்பத்தை  தாக்கி இப்படி முகநூலில் பதிவிட்டுள்ளது. திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. 

 மூத்த தலைவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் போடுவது சரி, இப்படியா இன்னொருவரை கம்ப்பேர் செய்து பதிவு போடுவது? இதற்கு பதில் வாய்பாய் செய்த நல்ல விஷயங்கள் சிலவற்றினையும்  கூறி அவருக்கு இரங்கல் செலுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதும் சரி தானே?!

click me!