கார்கில் வெற்றிக்காக இஸ்ரேல்வுடன் கைகோர்த்த வாஜ்பாய்... இவர்தான் உண்மையான ராஜதந்திரி!

By vinoth kumarFirst Published Aug 17, 2018, 10:36 AM IST
Highlights

கார்கில் போரில் தொட்டுவிடும் தூரத்தில் இருந்த வெற்றியை இஸ்ரேல் உதவியுடன் எட்டிப்பிடித்தவர் வாஜ்பாய். உண்மையில் கார்கில் போர் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு போரில் இந்தியாவை வெல்ல முடியாத என்று நன்றாகவே தெரியும்.

கார்கில் போரில் தொட்டுவிடும் தூரத்தில் இருந்த வெற்றியை இஸ்ரேல் உதவியுடன் எட்டிப்பிடித்தவர் வாஜ்பாய். உண்மையில் கார்கில் போர் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு போரில் இந்தியாவை வெல்ல முடியாத என்று நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் கார்கில் போர் வெடித்தது எப்படி என்றால்?அதற்கு அந்நாட்டு ராணுவமும் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐயும் தான் காரணம். முதல் தீவிரவாதிகள் மூலமாக இந்தியாவின் லடாக் பகுதியை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது தான் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் திட்டமாக இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் தடுமாறிய போது அவர்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் போரிடச் செல்வது கடைசி வரை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு தெரியாது.

இந்திய ராணுவத்திற்கும் – பாகிஸ்தான் ராணுவத்திற்கும் போர் மூண்ட பிறகு வேறு வழியின்றி நவாஸ் ஷெரீப் ராணுவத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். துவக்கத்தில் இந்திய ராணுவம் தடுமாறினாலும் பின்னர் பாகிஸ்தானை குலைநடுங்க வைத்தது. இதற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கொடுத்த தைரியமும் இந்திய ராணுவ தளபதிகளின் வியூகமும் தான். என்ன தான் கார்கிலில் இருநாட்டு ராணுவமும் மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் வாஜ்பாய் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

 அதாவது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகப்பணிகளை கிட்டத்தட்ட முடக்கும் அளவிற்கு வாஜ்பாயின் நடவடிக்கைகள் இருந்தனர். கராச்சி துறைமுகம் அமைந்துள்ள அரபிக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் குவிக்கப்பட்டன. எந்த ஒரு கப்பலும் கராச்சி துறைமுகத்தை அடைய முடியாத அளவிற்கு இந்திய கடற்படை கப்பல்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தின. போர் பதற்றம் காரணமாக ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு எண்ணெய் செல்ல முடியாத சூழல் உருவானது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் போரில் இருந்த நிலையில், எண்ணெய் தட்டுப்பாடும் அந்நாட்டில் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பின்வாங்குமாறு நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். போர் முடிந்தததாகவும் அவர் அறிவித்தார். ஆனாலும் கூட இந்திய எல்லைப்பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் பின்வாங்கவில்லை.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள் எந்த வழியாக வருகிறார்கள் எங்கு முகாம் அமைத்திருக்கிறார்கள் என்பதை மட்டும் இந்திய ராணுவ வீரர்களால் கணிக்க முடியாமல் இருந்தது. இதனால் எஞ்சிய பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விரட்டி அடிப்பதில் இந்திய ராணுவத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் செயற்கைகோள் புகைப்படங்களை வழங்க இஸ்ரேல் முன்வந்தது. அதாவது லடாக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ள பகுதிகளை இந்திய ராணுவத்திற்கு காட்டிக் கொடுக்க அப்போதைய இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார். இஸ்ரேல் கொடுக்கும் புகைப்படங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விரட்டுவதோடு இந்திய ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையக்கூடாது என்று ஒரு நிபந்தனை விதித்தார்.

 ராஜதந்திர நடவடிக்கையாக அந்த நிபந்தனையை வாஜ்பாய் ஏற்ற உடன் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தை இஸ்ரேல் ராணுவம் இந்திய ராணுவ வீரர்களுக்கு காட்டிக் கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களை சரண் அடைய வைத்தனர். இஸ்ரேலிடம் கொடுத்த வாக்குறுதியையும் மீறால் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. இப்படியாக வீரம் மட்டும் இல்லாமல் ராஜதந்திரங்கள் மூலமாக இந்தியாவின் கவுரவத்தை உலக அளவில் காத்தவர் நம் வாஜ்பாய்.

click me!