சத்குருவுடன் வீண் வம்பு... மேலிடத்தில் இருந்து வந்த அவசர உத்தரவு.. அமைச்சர் திடீர் பம்மல்..!

By Selva KathirFirst Published May 19, 2021, 9:36 AM IST
Highlights

சத்குருவை ஜக்கி என்றும் ஜக்கி எப்போதுமே சட்டத்தை மீறிபவர் என்றும் அவர் மீது விரைவாகவோ அல்லது பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி என்று அந்த அமைச்சர் பதில் கூறியிருந்தார். இது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியது. சட்டத்தை மீறியவர் ஜக்கி என்று ஒரு நீதிபதி போல் தீர்ப்பளித்த அந்த அமைச்சர் தண்டனை பற்றி எல்லாம்  பேசியிருந்தார். 

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று முழுமையாக இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த அமைச்சர் தனது இலாகாவையும் தாண்டி தேவையற்ற வீண் வம்புகளில் ஈடுபட்டுள்ளது திமுகவில் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் உச்சபட்ச அதிகார மையமான நபரை டென்சன் ஆக்கியுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அடுத்த நாளே, ஈஷா யோக மைய முறைகேடுகள் தொடர்பான விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாக வதந்திகள் பரவின. இது வதந்தி என்று தெரிந்தும் பெரியாரிய ஆதரவாளர்கள், முற்போக்காளர்கள் என்று கூறிக் கொள்ளப்படுவர்கள் அந்த தகவல்களை பகிர்ந்து தங்களின் அரிப்பை தாங்களே சொரிந்து இன்பம் கண்டு கொண்டிருந்தனர். ஆனால் அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வரும் தகவல்ளை எல்லாம் உண்மை என்று நம்பி செய்தி வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் ஈஷா யோகா மையம் மீதான புகார்கள் தொடர்பான கேள்விக்கு யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிகவும் டீசன்டாக பதில் அளித்து நழுவிக் கொண்டார். எந்த இடத்திலும் ஈஷா பற்றியோ அல்லது ஈஷாவின் பெயரையோ கூட சேகர் பாபு பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் அமைச்சர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவரிடம் கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யு சத்குரு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் அந்த அமைச்சர் பதில் கூறினார்.

அதாவது சத்குரு ஒரு publicity hound என்று அந்த அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். publicity hound என்றால் விளம்பரத்திற்காக அழையும் நாய் என்று பொருள். கோடிக்கணக்கான பக்தர்களையும், ஆதரவாளர்களையும் கொண்ட சத்குருவை மிக மிக மோசமான வார்த்தையில் அந்த அமைச்சர் விமர்சிக்க, அதையும் அந்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது. இதனால் டென்சன் ஆன ஈஷா யோகா மையம், அந்த அமைச்சருக்கு ஆங்கில நாளிதழ் மூலமாகவே பதில் அளித்து தனது அதிகாரத்தை காட்டியது. அந்த பதிலை அந்த ஆங்கில நாளிதழின் உயர் பொறுப்பில் இருப்பவர் ட்விட்டரில் பகிர, அமைச்சருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

சத்குருவை ஜக்கி என்றும் ஜக்கி எப்போதுமே சட்டத்தை மீறிபவர் என்றும் அவர் மீது விரைவாகவோ அல்லது பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி என்று அந்த அமைச்சர் பதில் கூறியிருந்தார். இது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியது. சட்டத்தை மீறியவர் ஜக்கி என்று ஒரு நீதிபதி போல் தீர்ப்பளித்த அந்த அமைச்சர் தண்டனை பற்றி எல்லாம்  பேசியிருந்தார். ஆனால் இதற்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக அந்த அமைச்சர் பேசுவதை தவிர்த்து வருகிறார். இதற்கு காரணம் சென்னையில் மாப்பிள்ளையிடம் இருந்து வந்த அவசர உத்தரவு தான் என்கிறார்கள்.

உன் வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள், உன் இலாகாவை தாண்டி உனக்கு என்ன வேலை என்று போனிலேயே அண்ணன் முறையான அமைச்சரை மாப்பிள்ளை உரிமையோடு லெப்ட் அன்ட் ரைட்  வாங்கியதாக சொல்கிறார்கள். மேலும் அமைச்சரான பிறகு சமூக வலைதளங்களில் மட்டும் செயல்படாமல் களத்தில் செயல்பட வேண்டும் என்றும் தேவையில்லாமல் பாஜக நாராயணன் போன்றோருக்கு ட்விட்டரில் பதில் அளித்துக் கொண்டிருக்காமல் கொரோனா விஷயத்தில் இருந்து மீண்டு வர எதாவது உருப்படியாக செய்யும் படி அண்ணன் முறையான அமைச்சருடன் மாப்பிள்ளை டென்சனாக பேசியதாக கூறப்படுகிறது. 

குடியரசுத் தலைவர் தொடங்கிய பிரதமர் மோடி வரை சத்குருவின் பின்புலம் தற்போது மிகவும் பலமாக உள்ளது. ஆட்சிக்கு வந்த சிறிது காலத்தில் தேவையே இல்லாமல் சத்குரு போன்றோரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று திமுக எடுத்த முடிவு தான் மாப்பிள்ளை அந்த அமைச்சரை கூப்பிட்டு எச்சரிக்க காரணம் என்கிறார்கள்.

click me!