கேப்டன் விஜயகாந்துக்கு என்ன ஆனது.. தேமுதிக தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 9:31 AM IST
Highlights

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது. விரைவில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் எனவும் அதில் கூறியுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டே தமிழக சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ஆனாலும், பிரசாரத்துக்காக சென்ற அவர் எதுவும் பேசாமல் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார், எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 
click me!