அப்பட்டமாக பொய் சொல்கிறார் வேலுமணி !! வைகோ செம காட்டம் !!

Published : Jun 18, 2019, 07:55 AM IST
அப்பட்டமாக பொய் சொல்கிறார் வேலுமணி !! வைகோ செம காட்டம் !!

சுருக்கம்

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வேலுமணி கூறியது அப்பட்டமான பொய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9000 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக அரசு கூறினாலும்  எங்கேயோ ஒருசில இடங்களில் தான் லாரிகளை பார்க்க முடிவதாக தெரிவித்தார். 

மழை பெய்த பொழுது தண்ணீரை சேமித்து வைக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வைகோ, தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்றும், ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

போர்க்கால அடிப்படை என்று பெயரளவில் சொன்னால் மட்டும் போதாது என்றும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வைகோ காட்டமாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!