ஸ்மிரிதி ராணி பதவி ஏற்றபோது கைதட்டலால் அதிர்ந்த நாடாளுமன்றம் !!

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 7:25 AM IST
Highlights

டெல்லியில்நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி எம்.பி.யாக பதவி ஏற்றபோது  பிரதமர் மோடி உட்படி பாஜக எம்.பி..க்கள் கைகளையும் மேஜையையும் நீண்ட நேரம் தட்டி உற்சாகப்படுத்தினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில், புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.  அப்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர்  ஸ்மிரிதி இரானி, எம்.பி.யாக பதவி ஏற்றபோது அதிக கைதட்டல் கிடைத்தது. 

அவர் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர்.அவரது பெயரை அழைத்தவுடன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்  உள்ளிட்ட பாக  உறுப்பினர்கள் நீண்ட நேரம் மேஜையைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்தியில் பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்த ஸ்மிரிதி இரானி, தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து , சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

click me!