
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாகவும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில், தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் அ.கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும் எந்த கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு இல்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.