மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

First Published Dec 27, 2016, 12:00 PM IST
Highlights


கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக,விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி ஆகியவை இனைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது. அதன் ஒருங்கினைப்பாளரா வைகோ பணியாற்றினார்.

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது,

ஆனால் அந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அணி தோல்வி அடைந்தது. இதற்குப் பின்னர் தேமுதிக மற்றும் தமாகா கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறின.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சில தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள் நலக் கூட்டணியை விட்டு மதிமுக விலகுவதாக தெரிவித்தார். ஆனால் அதன் தலைவர்களுடன் நட்புறவு தொடரும் எனவும் வைகோ கூறினார்.

தமிழகத்தை வறட்சி மாவட்டமாக  அறிவிக்க கோரி வரும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்தார்.

 

click me!