
சென்னை தலைமை செயலக்த்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் தான் செயல் தலைவராக தேர்வு செய்யப்படுவது பொதுக்குழுவிற்கு பிறகு தெரிய வரும் என்று கூறினார்.
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று திடீரென சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்: எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தன்னுடைய அறைக்கு வர தமக்கு உரிமை உண்டு.
அந்த அறையில் தமக்கு உதவியாளராக நியமிக்கப்பட்ட ஒருவரை திடீரென நீக்கிவிட்டார்கள். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில் நீக்கியவரை மீண்டும் நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.அது பற்றி உறுப்பினர் கு.க.செல்வம் உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து கேட்டதற்கு உதவியாளரை விரைவில் நியமிப்பதாக அவர் உறுதியளித்ததாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
போயஸ் கார்டனுக்கு பாதுகாப்பு அளிக்க கூடாதா? அங்கு வரும் விஐபிக்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டாமா? என செய்தியாளர்கள் கேட்டனர்
அதற்கு பதிலளித்த ஸ்டாலின் போயஸ் கார்டானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தமக்கு எந்த வித ஆட்சேபமும் இல்லை. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட்டதோ அத்தகைய பாதுகாப்பு அவருடைய தோழி சசிகலாவுக்கு அளிக்கப்படுவதை தான் தாம் விமர்சனம் செய்திருக்கின்றேன் என்று கூறினார்.
தாங்கள் செயல் தலைவராவது பற்றி கேட்டதற்கு செயற்குழு ,பொதுக்குழுவில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ஆமாம் நானும் அதையேத்தான் சொல்கிறேன் என்று கூறிய ஸ்டாலின் பொதுக்குழுவுக்கு பிறகுதான் தெரியும் என்று கூறினார்.