கட்சி அங்கீகாரத்துக்காகப் போராடும் வைகோ... திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 12 தொகுதிகள் கிடைக்குமா.?

By Asianet TamilFirst Published Mar 2, 2021, 10:31 PM IST
Highlights

மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்க 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு கட்சிகளை தவிர பிற கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதர கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. திமுக கூட்டணியில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டுவருகிறது. ஆனால், திமுக தரப்பில் 7 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், திமுக - மதிமுக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் திமுகவுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக வைகோ விளக்கம் அளித்தார். “தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.  8 தொகுதிகளில் வென்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார். 8 தொகுதிகளில் வென்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று வைகோ கூறியிருப்பதன் மூலம், அக்கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. மேலும் 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தனிச்சின்னமும் கிடைக்கும் என்பதால், திமுகவுடன் மீண்டும் இதை வலியுறுத்த மதிமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

click me!