'ரஜினிக்கு முழு தகுதியும் இருக்கு'..! புகழ்ந்து தள்ளிய புரட்சிப்புயல்..!

By Manikandan S R SFirst Published Nov 3, 2019, 4:30 PM IST
Highlights

கலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முழு தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா வரும் 20 ம் தேதியில் இருந்து 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறப்பு நட்சத்திர விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தனக்கு விருது வழங்குவதாக அறிவித்த மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

1975ம் ஆண்டில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ரஜினிகாந்த், 44 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 167 திரைப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தற்போது மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். ரஜினியிடம், "கலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முழு தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்’’ என வைகோ கூறியுள்ளார். அவரின் வாழ்த்திற்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

click me!