40 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்க தீயா வேலை செய்வேன்- ஸ்டாலினை சந்தித்த பின் அந்தர் பண்ணிய வைகோ

By sathish kFirst Published Nov 28, 2018, 8:17 PM IST
Highlights

40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்' - ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் மதிமுக, விசிக கூட்டணியில் இல்லை. தோழமைக் கட்சிகள் தான் என தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய இந்த பதிலால் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்ற சர்ச்சைக்கும் ஸ்டாலினின் இந்த விளக்கமே பதிலாகும். கூட்டணிப் பிரச்சினைக்கும் ஸ்டாலின் பதில் சொல்லிவிட்டார்.  மீடியாக்களில் இன்று வரை பார்த்து கொண்டு வருகிறேன். என்னை எப்படியாவது கூட்டணியில் இருந்து வெளியேற்ற வைக்க வேண்டும் என்பது பல பேருடைய விருப்பமாக இருக்கிறது.  

மீம்ஸ் போட்டு என்னை கேலி  செய்கிறார்கள். ஆனால் அது எப்போதும் நடக்காது. 7 தமிழர் விடுதலையில் ஆளுநர் பன்வாரிலால் பாரபட்சமாக நடந்து விட்டார். 7 தமிழரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று விடுதலைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரை விடுதலை செய்துள்ளார்.

கேட்டால், அவர்களுக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் முன்பகை இல்லை என்று விளக்கம் தருகிறார். ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது என்றார் வைகோ.

click me!