அடுத்தடுத்து சர்ச்சைகள்... மணக்கோலத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்ட காடுவெட்டி குரு மகள்...!!!

By vinoth kumarFirst Published Nov 28, 2018, 5:53 PM IST
Highlights

முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த, காடுவெட்டி குருவின், மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் சகோதரி மகன் மனோஜ் குமாருக்கும் கும்பகோணத்தில் மிக எளிமையாக இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கும்பகோணம் காவல் நிலையத்தில் மணமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த, காடுவெட்டி குருவின், மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் சகோதரி மகன் மனோஜ் குமாருக்கும் கும்பகோணத்தில் மிக எளிமையாக இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கும்பகோணம் காவல் நிலையத்தில் மணமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

பா.ம.க என்ற கட்சியின் ஆணிவேறாகவும் வன்னிய இளைஞர்களின் ஹீரோவாகவும் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. வன்னிய இளைஞர்களால் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். ராமதாசுக்கு வலது கரமாக திகழ்ந்து வந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். ஆனால் உடல் நலக்குறைவால் கடந்த மே மாதம் காடுவெட்டி குரு மறைந்துவிட்டார். அவர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.

 

வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம் என பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இந்த விஷயம் அறிந்த பாமகவினர் எந்த நேரத்திலும் குரு குடும்பத்திற்கு உதவ தயார் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து, குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது தாயாரை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்துவைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில் காடுவெட்டி குருவின், 3-வது தங்கை சந்திரலேகா. இவரது மகன் மனோஜ்-விருதாம்பிக்கை இருவருக்கும் திருமணம் செய்ய சிறு வயதிலேயே தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் இன்று காடுவெட்டி குருவின்  மகள் விருதாம்பிகைக்கும் – குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் மனோஜின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் காடுவெட்டி குருவின் மனைவி லதா உள்ளிட்ட பல உறவினர்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. என்னவென்றால் திருமணம் நடைபெற்ற கையோடு கும்பகோண காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!