பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன வைகோ...!

 
Published : Jan 13, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன வைகோ...!

சுருக்கம்

VAIKO CONVEYED PONGAL WISHES TO TN PEOPLE

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தானிய மணிகளைத் தரும் நிலத்திற்குப் பெருமை சேர்த்து, கோழைபடாத மேழிச்செல்வமான, தங்கள் இல்லத்துப் பிள்ளைகளைப் போல அன்புடன் பராமரிக்கும் எருதுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஆவினங்களுக்குப் படையல் இட்டு, நெல்மணிகள் தந்த அரிசியை, கன்னல் தந்த சர்க்கரையோடு கலந்து, தித்திக்கும் பொங்கலாய் இல்லத்தில் அனைவரும் உண்டு மகிழ்ந்து, ஏறு தழுவுதல் என்ற மரபு வழி வீர விளையாட்டை, சீறி வரும் காளைகளின் திமிலை, காளையர்கள் கரங்களை அணைத்து, இயற்கைக்கு ஆராதனை செய்வதுதான் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஆகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளம் ஆயிற்று.உழுது பயிரிட்டு உலகத்திற்கு உணவு அளித்த விவசாயிகளின் விம்மல்கள் தணியவில்லை; பெருகிற்று.
இன்று தமிழ்நாட்டின் நிலையைச் சிந்திக்கும்போதே நெஞ்சம் கலங்குகின்றது.

வெள்ளத்தால் புரண்டோடி வந்த நதிகளின் வெள்ளத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த தண்ணீர் உரிமையை, அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கே துரோகம் இழைக்கிறது.

மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும் அடியோடு நாசமாக்க மத்திய அரசு முனைந்துவிட்டது. மாநில நலனையும், உரிமைகளையும் காக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசினுடைய ஆணைகளுக்கு அஞ்சி கட்டுப்பட்டு கடமை தவறும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது.

எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் நலன்களைக் காக்கவும், பணநாயகத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகத்தைக் கhக்கவும் தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும்.
இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்."

- வைகோ

  மதிமுக

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!