மு.க.ஸ்டாலினிடம் சீட்டு வாங்கி எம்.பி.,யாகி பாஜகவின் சங்கியாகி விட்ட வைகோ... பொளேர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Aug 10, 2019, 3:31 PM IST
Highlights

துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார். 
 

துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அதை தெரிந்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதசார்பற்ற கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு வைகோவை வெற்றி பெற செய்தார்.

மதசார்பற்ற கூட்டணி மூலம்தான் வைகோ மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். டெல்லி சென்றதும் அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தார். காஷ்மீர் பிரச்சினையில் மாநிலங்களவையில் பேசிய வைகோ, காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்ததாக உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ காப்பாற்றியது காங்கிரஸ் கட்சி. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் துரோகம் செய்துவிட்டது என குற்றம்சாட்டி வந்த வைகோ, தற்போது காங்கிரஸ் இலங்கை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார்.

இதையும் படிங்க:- ’உங்க சங்காத்தமே வேண்டாம்...’ இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு..!

17 ஆண்டு காலம் தி.மு.க. சார்பில் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து. தேர்தலின்போது எங்கள் தொகுதிகளுக்கு அவர் வரவே இல்லை. காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது இல்லை.

காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேசுவதற்கு மாநிலங்களவையில் 3 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டபோது. காங்கிரசை குற்றம் சாட்டி பேச போகிறேன், எனக்கு 10 நிமிடம் தாருங்கள் என அமித்ஷாவிடம் கேட்டார். பா.ஜ.க. தூண்டியதால்தான் வைகோ அவ்வாறு பேச தொடங்கினார். அவர் சென்னைக்கு வந்த பின்பும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசியதால் தான், நாங்களும் அவருக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது. கூட்டணியில் உள்ளவர்களின் குறைபாடுகளை வெளிப்படையாக பேசுவது இல்லை.

இதையும் படிங்க:- தொலைச்சிடுவேன் ராஸ்கல்... இன்ஸ்பெக்டரை கன்னா பின்னாவென தீட்டிய காஞ்சி கலெக்டர்..!

ஆனால் வைகோ, உண்மைக்கு புறம்பாக பேசியதால் அவரைப்பற்றி பேச வேண்டியதாகிவிட்டது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள். மத்திய அரசு கடந்த 5-ம்தேதி திடீரென மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சினை பற்றிய மசோதாவை கொண்டு வந்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர், கேரளா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து வரமுடியாத நிலையில் இருந்ததால் எதிராக வாக்களிக்க முடியவில்லை. எனவே அதுபற்றி குற்றம் சொல்லக்கூடாது.

அ.தி.மு.க. மக்களவையில் ஒரு தீர்மானததை ஆதரிக்கிறது, மாநிலங்களவையில் எதிர்க்கிறது. வெளிநடப்பு என்கிறார்கள். நாடக கம்பெனி போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அமைச்சர்களும் நடிகர்கள்போல் செயல்படுகிறார்கள். முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கட்டும். அ.தி.மு.க. அரசு கமி‌ஷன் அரசு. அவர்களின் செயல்பாட்டால் தமிழகம் பின்தங்கிவிட்டது’’ என அவர் கூறினார்.

click me!