
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நாவை அடகிப் பேச வேண்டும் என்றும், அவர் பெயரைலச் சொல்லுவதே பெரிய பாவம் என்றும் மதிமுக பொதுச் செய்லாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் எச்,ராஜா, அண்மைக்காலமாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது பேச்சு தமிழர்களை முகம் சுளிக்கவைக்கும் அளவுக்கு இருப்பதால் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா, வைரமுத்துவின் தாய் குறித்து கேவலமாக பேசினார். மேலும் வைரமுத்துவை மிரட்டும் தொனியில் பேசினார்.
எச்,ராஜாவின் பேச்சு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாவை அடக்கிப் பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் எச்.ராஜா பெயரைச் சொல்வதே பாவம் என்றும், பாஜகவிக்கு பெரும் பின்னடைவை பெற்றுத்தருபவர் ராஜாவாகத்தான் இருக்கும் என்றும் வைகோ மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார்.