விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததே வெறும் 2 நிமிடங்கள் தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறி அதிர வைத்துள்ளார்.
சென்னை: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததே வெறும் 2 நிமிடங்கள் தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறி அதிர வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மேடைகளில் அரங்கம் அதிர பேசுவார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழ போராட்டம் குறித்தும் உணர்ச்சி பெருக்குடன் பேசுவார்.
அவர் பேசும் மேடைகளில் எல்லாம் பிரபாகரன் பற்றி பேசாமல் இருந்ததே இல்லை. பிரபாகரனுடன் நெருங்கி பழகி உள்ளேன், போர் பயிற்சியை நேரில் கண்டேன், அவருடனும் மதினியுடனும் இட்லி சாப்பிட்டேன், மதிவதினி அண்ணி ஆமைக்கறி தந்தார்கள் என்று கூறுவார். அவரது பேச்சை கேட்கும் நாம் தமிழர் தம்பிகள் புல்லரித்து போய்விடுவர்.
அதே நேரத்தில் அவரது பிரபாகரன் பேச்சை கேலி செய்யாதவர்களே இல்லை. இணையத்தில் சீமான் பற்றியும் ஆமைக்கறி சாப்பிட்டது பற்றியும் கமெண்டுகள் இன்னமும் பறந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந் நிலையில், பிரபாகரனை சீமான் சந்தித்தாரா இல்லையா என்ற ரகசியத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ போட்டு உடைத்துள்ளார். இது குறித்து அவர் கூட்டம் ஒன்றில் பேசி இருப்பதாவது:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் 2 நிமிடங்கள் தான் சந்தித்தார். அவருடன் போட்டோ எடுக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. அதை தவிர ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று கூறுவது உள்ளிட்ட அனைத்தும் பொய்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சீமான் மீது கோபத்தில் உள்ளனர். பிரபாகரன் பற்றியும், விடுதலை புலிகள் பற்றியும் பொய் தகவல்களை சீமான் தெரிவித்து இருக்கிறார் என்று கூறி உள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.