மின்சாரம் போல் செயல்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி... அமைச்சரே நெளியும் அளவிற்கு புகழ்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!

By manimegalai aFirst Published Oct 16, 2021, 6:54 PM IST
Highlights

தமிழ்நாட்டிற்கு 2,500 மெகாவாட் மின் தேவை இடைவெளி உள்ளது. ஒரு யூனிட் ரூ.2.61 என்ற குறைந்த விலையில் மின்சாரக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு 2,500 மெகாவாட் மின் தேவை இடைவெளி உள்ளது. ஒரு யூனிட் ரூ.2.61 என்ற குறைந்த விலையில் மின்சாரக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்ததில் இருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டுகளை பெற அமைச்சர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். மின்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அதிமுக-வில் இருந்தபோதே தமது அதிரடி செயல்பாடுகளால் ஜெயலலிதாவின் கவனத்தை பெற்றவர். அந்தவகையில் தற்போது ஸ்டாலினிடமும் நற்பெயரை பெற்று வருகிறார். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கையால் தொடங்கவைத்து நற்சான்றிதழ் வாங்கினார்.

இந்தநிலையில் தான் மின்சார துறையின்மேலாண்மை தலைவரும் அமைச்சரை வானளாவ புகழந்து தள்ளியிருக்கிறார். கரூரில் நடைபெற்ற தொழில்துறையினருடான கருத்தரங்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்சார துறை மேலாண்மை தலைவர் ராஜேஸ் லக்கானி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய லக்கானி, அமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எங்களால் வேலை செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு துறை ரீதியான நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். பல அமைச்சர்களிடம் பணியாற்றியுள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி அளவிற்கு வேகமாக செயல்படும் அமைச்சரை பார்த்தது இல்லை என புகழ்ந்து தள்ளினார். மேலும் பதவி ஏற்று 5 மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டார். ஒரே நேரத்தில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்திற்கு 2500 மெகாவாட் மின் தேவை இடைவெளி உள்ளது. இதை சரி செய்ய மிக குறைந்த விலையில் ரூ.2.61 என்ற அடிப்படையில் மின்சாரக் கொள்முதல் செய்ய முதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 1500 மெகாவாட் மின் தேவைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.3.26 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

click me!