தளபதி டூ தர்பார்...உடைஞ்ச ரெக்கார்டு பிளேயர் மாதிரி பேசிட்டே இருக்கார் ரஜினி! வேற ஒரு யூஸும் இல்ல: வெளுக்கும் வைகை செல்வன்..!

By Vishnu PriyaFirst Published Dec 20, 2019, 6:10 PM IST
Highlights

ரஜினி - கமல் என இரண்டு நபர்களை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த தி.மு.க.வுக்கு இப்போது கமல் தங்கள் பக்கம் சாய்ந்திருப்பதன் மூலம் ஒரு பக்க இம்சை குறைந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க.வோ கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் எதிராக அடிச்சு நொறுக்கி அரசியல் செய்ய வேண்டிய சூழலில் உள்ளது. அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளுத்தெடுக்கின்றனர் அக்கட்சியினர் இரு நடிகர்களையும். 

கமல்ஹாசன் தி.மு.க. வை ‘ஊழல் பொதி மூட்டை’ என்றார்  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது. ஆனால் இன்று அதே பொதி மூட்டையோடுதான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் கைகோர்த்து நின்று மோடியை எதிர்க்கிறார். இது என்னவகையான ‘மாற்று அரசியலோ’ புரியவில்லை. எனவே  ரஜினி - கமல் என இரண்டு நபர்களை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த தி.மு.க.வுக்கு இப்போது கமல் தங்கள் பக்கம் சாய்ந்திருப்பதன் மூலம் ஒரு பக்க இம்சை குறைந்துள்ளது. ஆனால் அ.தி.மு.க.வோ கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் எதிராக அடிச்சு நொறுக்கி அரசியல் செய்ய வேண்டிய சூழலில் உள்ளது. அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளுத்தெடுக்கின்றனர் அக்கட்சியினர் இரு நடிகர்களையும். 


ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயக்குமார் இவர்களைத் தாண்டி மாஜி அமைச்சர் வைகை செல்வனும் ரஜினி - கமலை வெச்சு வெளுக்கிறார் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படி பொளந்திருக்கிறார்....”ரஜினி கதையை பேசினால் கொட்டாவியோடு தூக்கம் தான் வருது. அதாவது, பலப்பல வருஷங்களுக்கு முன்னாடி ‘தளபதி’ன்னு ஒரு படம் ரஜினிக்கு ரிலீஸாச்சு. அப்போது ‘வருங்கால முதல்வர்’ அப்படின்னு அவரை புகழ்ந்து போஸ்டர் ஒட்டினாங்க சில ரசிகர்கள். அப்போ இருந்து இதோ இப்ப என்னமோ ஒரு படம் வருதே...ஆங்! தர்பார், இப்ப வரைக்கும்னு இதோ இருபத்து எட்டு வருஷாமக ரஜினிகாந்த் ‘அரசியலுக்கு வருகிறேன்! அரசியலுக்கு வருகிறேன்!’ன்னு சொல்லிட்டே இருக்கார். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை.  உடைஞ்ச ரெக்கார்டு பிளேயர், ஒரே பாட்டை திரும்பத் திரும்ப பாடிட்டே இருக்கும், மாறாது. அந்த கதையால்ல இருக்குது. 1996-ல் ரஜினி வாய்ஸ் கொடுத்ததால்தான் தி.மு.க. ஜெயித்ததாக சொல்றாங்க. ஆனால் 1998ல் அதே கூட்டணிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்தாரு, பப்பு வேகலையே. 2004ல் பா.ம.க.வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தாரு அப்போதும் மக்கள் ரஜினியை ஒரு விஷயமாவே கண்டுக்கலை. அதனால அவருக்கு (ரஜினி) செல்வாக்கு இருக்குதுங்கிறது வெறும் மாயை பாஸு. அவர் பாஷையில சொன்னால் மாயா! மாயா! எல்லாம் மாயா. 


அட சேலத்து ரசிகர் தற்கொலை செய்து கொண்ட பிறகும் கூட இவரு மாறலை. இன்னும் அரசியலுக்கு வர்றேன்னு பொய் பேசியே தன் படங்களை ஓட வெச்சுட்டு இருக்கிறார். அவ்ளோதான். அரசியல் என்ன ரெண்டரை மணி நேர சினிமாவா? களத்துல நிக்கணும்,  கால் கடுக்க. ஆனால் இவரு நடிப்புல கோடிக்கணக்குல சம்பாதிச்சுட்டு இருப்பாராம். ஆனால் திடீர்ன்னு அரசியலை எட்டிப்பார்ப்பாராம், உடனே முதலமைச்சராக்கிடணுமாம். மக்களோடு நின்னு, மக்கள் பணி பண்ணாமல் இப்படி முதல்வராக நினைக்கிறதெல்லாம் டூ மச் கனவுகள். இவருக்கு மட்டுமில்லைங்க, கமலுக்கும் இப்படித்தான் ஆசை போட்டு ஆட்டுது. போன நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் கமல். என்ன கிடைச்சுது? எட்டாயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரைக்கும் வாக்குகளை பெற்று, மூன்று புள்ளி எழுபத்து ரெண்டு சதவீத வாக்குகளைப் பெற்றார்! அவ்ளோதான்.

இதுக்கு பிறகு அரசியலை விட்டுட்டு பிக்பாஸ் நடத்தினார், அதை முடிச்சுட்டு சினிமாவுக்கு போனார். இப்ப மறுபடியும் போராட்டம், ஆர்பாட்டம்னு பேச துவங்கியிருக்கிறார். 
காந்திய வழியில் போறதா பேசிக்கிற கமல்ஹாசன், ஆனால் அந்த கிராமத்துக்கு நல்ல செய்ய கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிச்சிருக்கிறார். இதுவா காந்திய வழியில் நடக்கும் செயல்! விடுங்க இவங்க ரெண்டு பேரையும். சினிமா போராடிச்சுடுன்னு அரசியல் பக்கம் வந்து நின்னு பஞ்ச் டயலாக் பேசிட்டிருக்காங்க. ஒரே காமெடிதான் போங்க.” என்று வெளுத்திருக்கிறார். சர்தான் போங்கள்!

click me!