வைகோவுக்கு ஏன் வெயிட்டிங் லிஸ்ட் தெரியுமா ? திமுகவின் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Nov 27, 2018, 6:27 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என பொது மேடைகளில் அறிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது கூட்டணிக்காக வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை வைகோ பாராட்டியதே இதற்கு காரணமாக என கூறுகிறார்கள் திமுகவினர்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டி அளித்த, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இல்லை என்றும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. நட்பு கட்சிகள் வேறு; கூட்டணி கட்சிகள் வேறு' என்றார்.

முதலமைச்சர்  நாற்காலியில், ஸ்டாலினை அமர்த்தி, அழகு பார்ப்பேன்' என, அறிவித்த வைகோ, இதனால் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.அதற்கு காரணம், வைகோவின் சமீபத்திய அறிக்கைகள் தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம். புயல் நிவாரண பணிகளில், ஆளும் அரசும், அமைச்சர்களும் ஈடுபட்டுஉள்ளதை, வைகோ வெகுவாக பாராட்டியிருந்தார். தி.மு.க., கூட்டணியில் சேர துடிக்கும் வைகோ, ஆளும் கட்சியை பாராட்டியதை, ஸ்டாலின் ரசிக்கவில்லை.அதன் காரணமாகவே, வைகோவை  வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைத்து விட்டார் என்றும்  அதன் வெளிப்பாடு தான், துரைமுருகனின் பேட்டி என்றும் தெரிகிறது.

இதையடுத்துதான்  தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை, ஸ்டாலின் தான் தெளிவு படுத்த வேண்டும் என வைகோ  பேட்டி அளித்தார்.

இதனிடையே மதிமுக சார்பில் முருகன்,  சாந்தன், பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும் என வைகோ, ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு, ஸ்டாலின் எழுதியுள்ள பதில் கடிதத்தில் ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நிலைப்பாடு. எனவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள, கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வரவேற்கிறேன் என ஆதரவு தெரிவித்திருந்தார்.

துரைமுருகனின்  பேட்டியால் விரக்தி அடைந்துள்ள வைகோ, திருமாவளவனை அழைத்துக் கொண்டு, ஆளும் கட்சி பக்கம் போய் விடும் வாய்ப்பு உள்ளது என்றும் எனவே, அதை தடுக்கும் தந்திரமாகவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள போராட்டத்திற்கு, தி.மு.க., தற்காலிக ஆதரவு அளித்துள்ளது என, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், 'போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் வாயிலாக, இரு கட்சிகளுக்கு இடையே நட்பு நீடிக்கிறது. 'தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், கடைசி நேரத்தில் சேரலாம். எந்தெந்த கட்சி சேருகிறது என்பது தெரிந்த பின், எங்களிடம் பேச வாய்ப்பு இருக்கிறது' என மதிமுக நினைக்கிறது

click me!