இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை? விழிபிதுங்கும் சுகாதாரத்துறை.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 9:36 AM IST
Highlights

குறிப்பாக சென்னைக்கு மட்டும் 14000 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 23520 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய மாவட்டங்களுக்கு 25,500 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 30880 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்திற்கு போதுமான அளவு வராததால் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலையில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் 1.5 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசி வந்துள்ளது. அதனை அனைத்து மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னைக்கு மட்டும் 14000 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 23520 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய மாவட்டங்களுக்கு 25,500 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 30880 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கோயம்புத்தூர் ஈரோடு நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 17000 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 16,160 கோவாக்சின் தடுப்பூசியும், சேலம் ஆத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 14000 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 10880 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 19000 கோவிஷூல்டு தடுப்பூசி மற்றும் 7360 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று  வந்த அனைத்து தடுப்பூசிகளையும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பியுள்ளனர். எனவே இன்று முதல் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளமால் காத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
 

click me!