விக்கிரவாண்டியில் தனித்து போட்டியிடும் கவுதமன்! நாளை வேட்புமனுதாக்கல்

By sathish kFirst Published Sep 26, 2019, 6:31 PM IST
Highlights

நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வருபவருமான கவுதமன் கூறியுள்ளார்.

நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வருபவருமான கவுதமன் கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 21ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டியின் நா.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் வெ.நாராயணன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில்  இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வருபவருமான கவுதமன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;  ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது, நானும் இந்த மண்ணின் மைந்தனாக இருந்துள்ளேன். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்கள் என்னை வெற்றிப் பெற வைப்பார்கள். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தால் வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 
 
போர் வீரனாக இருந்தால் களத்தில் நிற்க வேண்டும், அப்போதுதான் வெற்றி தோல்வியை உணர முடியும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறேன் நாளை வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

click me!